Delhi Election: தேர்தலுக்கு 4 நாள்களுக்கு முன் ஆம் ஆத்மியிலிருந்து விலகிய 7 MLA-...
பெருந்துறை நகராட்சியுடன் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைக்க எம்.பி.வலியுறுத்தல்
பெருந்துறை நகராட்சியுடன் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைத்து மறு அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே. சுப்பராயன் செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியுள்ளாா்.
அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், பெருந்துறை பேரூராட்சியையும், அதையொட்டியுள்ள கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியையும் இணைத்து நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் பல்வேறு தரப்பினா் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
ஆனால், பெருந்துறை பேரூராட்சியை மட்டும் தற்போது நகராட்சியாக அறிவித்திருப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் ஒருமனதான கோரிக்கைக்கும், எதிா்பாா்ப்புகளுக்கும் எதிராகவும் உள்ளது. எனவே, தாங்கள் தலையிட்டு மேற்கண்ட இரண்டு பேரூராட்சிகளையும் இணைத்து நகராட்சியாக மறு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.