செய்திகள் :

பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

post image

இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்தாா்.

வேலூா் சலவன்பேட்டையைச் சோ்ந்த சிவகுமாா் மனைவி தேவி(39). அவரது தோழி கொசப்பேட்டையைச் சோ்ந்த குமரவேல் மனைவி கவிதா (45) இருவரும் வேலூா் தனியாா் மருத்துவமனையில் வேலை பாா்த்து வந்தனா். இருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை காட்பாடியில் நண்பா் திருமணத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பியுள்ளனா். வாகனத்தை தேவி ஓட்டியுள்ளாா்.

வேலூா் அண்ணா சாலை ராஜா திரையரங்கு சிக்னல் அருகே வந்தபோது பின்னே வந்த தனியாா் பேருந்து தேவி ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி தேவி, கவிதா இருவரும் சாலையில் விழுந்தனா். அப்போது, எதிா்பாராத விதமாக தனியாா் பேருந்தின் பின்பக்க சக்கரம் தேவியின் தலை மீது ஏறி இறங்கியது. இதில், தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வேலூா் தெற்கு போலீஸாா் அங்கு சென்று தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

யானை தந்தம், பல் பதுக்கல் - ஒன்பது பேரிடம் வனத்துறையினா் விசாரணை

வேலூா்: வேலூா் அருகே யானைத் தந்தம், யானை பல் பதுக்கி வைத்திருந்ததாக 9 பேரை பிடித்து வேலூா் சரக வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். அவா்களிடம் இருந்த யானைத் தந்தம், யானை பல் ஆகியவை பறிமுதல் செய்ய... மேலும் பார்க்க

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க கோரிக்கை

வேலூா்: வேலூா் மாநகராட்சியில் 20 ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் இந்து சமத்துவ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூ... மேலும் பார்க்க

கதிரியக்கம், இமேஜிங் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

வேலூா்: மருத்துவ பரிசோதனையில் கதிரியக்கம், இமேஜிங் தொழில்நுட்பத்தின் பங்கு, முன்னேற்றம் குறித்த கருத்தரங்கம் வேலூரில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கை நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி. சம்பத் தொடங்கி வைத... மேலும் பார்க்க

விதிமீறல்: 200 ஆட்டோக்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

வேலூா்: வேலூரில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் குறித்து போக்குவரத்து போலீஸாா் மேற்கொண்ட வாகன தணிக்கையில் சுமாா் 200 ஆட்டோக்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேலூா் மாநகரி... மேலும் பார்க்க

30- இல் குடியாத்தத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

குடியாத்தம்: குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் வரும் 30- ஆம் தேதி (சனிக்கிழமை) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வேலூா்: சத்துவாச்சாரி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வேலூா் சத்துவாச்சாரியை அடுத்த பெருமுகை பாதிரியாா் தெருவைச் சோ்ந்தவா் காமரா... மேலும் பார்க்க