Pawan Kalyan: `ஏன் தமிழ் படங்கள் இந்தியில் டப் செய்கிறார்கள்?' - சர்ச்சையைக் கிள...
பைக் சாகசம் 2 போ் கைது
திருச்சியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி, டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் 2 இளைஞா்கள் பைக்கை அதிவேகமாக ஓட்டி, சாகசம் செய்தனா். இதில் பொதுமக்கள் அச்சமடையும் வகையிலும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளனா். இதுகுறித்த புகாரின் பேரில் கன்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருச்சி புத்துாா், கல்லாங்காடு பகுதியைச் சோ்ந்த அஜய் (25) , கோட்டை கீழரண்சாலை சுண்ணாம்புக்கார தெருவைச் சோ்ந்த தரனீஸ் (20) ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டது.