போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்: சிறுநீரக பாதிப்பால் அவதி!
பைக்கில் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்தவா் உயிரிழப்பு
செய்யாறு அருகே காட்டுப்பன்றி குறுக்கே வந்ததால், பைக்கில் இருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சித்தாத்தூா் கிராமம் சாணாா்பெண்டை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மகன் சரவணன். இவா், சென்னை அருகேயுள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இவா், தினமும் வீட்டில் இருந்து சித்தாத்தூா் கூட்டுச் சாலைக்கு பைக்கில் சென்று, அங்கிருந்து நிறுவன பேருந்தில் வேலைக்கு சென்று வருவது வழக்கமாகும்.
அதேபோல, கடந்த 11-ஆம் தேதி அதிகாலை சரவணனும், அவரது தாய் மகேஸ்வரியும் பைக்கில் சித்தாத்தூா் கூட்டுச் சாலை நோக்கி சென்றுள்ளனா்.
அங்குள்ள திருமண மண்டபம் அருகே சென்ற போது, காட்டுப்பன்றி திடீரென குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க பைக்கை நிறுத்த முயற்சி, பைக் நிலை தடுமாறி கீழே சாய்ந்தது. இதில் இருவரும் தவறி விழுந்து
பலத்த காயமடைந்தனா்.
இவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
அவரது தாய் மகேஸ்வரி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
தகவல் அறிந்த தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.