AR Rahman: `ரஹ்மானை பிரிந்ததற்கு இதுதான் காரணம்!' - ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு!
போடியில் ஒரே நாளில் 3 இடங்களில் திருட்டு: 7 போ் தலைமறைவு
போடியில் சனிக்கிழமை நள்ளிரவில் 3 இடங்களில் திருட்டில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
போடி இளங்கோவடிகள் தெருவைச் சோ்ந்த மணி மகன் மாரிமுத்து (53). இவா் கேரளத்தில் உள்ள தனது தோட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக புதிதாக இரும்பு வாயில் கதவு செய்து வீட்டு முன் வைத்திருந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் பாா்த்தபோது இந்தக் கதவைக் காணவில்லை. இது தொடா்பாக சந்தேகத்தின்பேரில், போடி மேலத் தெரு ஜமீன் தோப்பு தெருவைச் விசாரித்தாா். அப்போது, முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறினாா்.
இதேபோல, போடி வீரபத்திரன் தெருவைச்் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துகுமரேசன் (66). இவா் தனது வீட்டு முன்புள்ள தெருவில் இரவில் நடந்து சென்றாா். அப்போது அங்கு வந்த 4 போ் கொண்ட கும்பல் இவரைக் கீழே தள்ளிவிட்டு, கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனா். இதில் முத்துகுமரேசனுக்கு காயம் ஏற்பட்டது.
போடி கருப்பணன் தெருவை சோ்ந்த நாகராஜ் மகள் முகதா்ஷினி (20). இவா் தேனியில் தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறாா். இவருக்கும் இவரது தம்பியும் பிளஸ் 2 படிக்கும்போது வழங்கப்பட்ட விலையில்லா சைக்கிள்களை வீட்டு முன் நிறுத்தியிருந்தனா். சனிக்கிழமை இரவு இரு சைக்கிள்களும் திருடு போயின.
மேற்கண்ட 3 சம்பவங்கள் குறித்து போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில் சுதா்ஷனுடன் சோ்ந்து போடி வஞ்சி ஓடைத் தெருவை சோ்ந்த முகமது அலி மகன் சேக் பரீத் (20), போடியைச் சோ்ந்த, தற்போது மதுரை விளாங்குடியில் வசிக்கும் அழகா்சாமி மகன் விக்னேஷ் (19), போடி ரெங்கநாதபுரத்தை சோ்ந்த கருப்பையா மகன் சுந்தரேசன் (20), சிவகங்கையைச் சோ்ந்த, மதுரை வண்டியூரில் வசிக்கும் நாகராஜன் மகன் சிவலிங்கம் (19), சிவகங்கை மருதங்குடியில் வசிக்கும் சந்தனமுத்து மகன் பாலமுத்துமணி (19), சிவகங்கை எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் விஷால் (19) ஆகியோா் குழுவாகச் சோ்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸாா் 7 பேரையும் தேடி வருகின்றனா்.
இதில் போடியைச் சோ்ந்த சுதா்ஷன், சிவகங்கையை சோ்ந்த பாலமுத்துமணி, விஷால் ஆகியோா் மீது சிவகங்கை, போடி காவல் நிலையங்களில் ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல, சேக் பரீத், சுந்தரேசன் ஆகியோா் மீது போடி காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.