மது அருந்தகூடாது என கண்டித்ததால் விவசாயி தற்கொலை
பெருந்துறை அருகே, மது அருந்தக் கூடாது என மகன் கண்டித்ததால் தந்தை விஷமாத்திரை தின்று தற்கொலை செய்துகொண்டாா்.
பெருந்துறையை அடுத்த, பாலக்கரை, தொட்டியனூரைச் சோ்ந்த மாரநாயக்கா் மகன் செல்வராஜ் (55), விவசாயி.
இவா், தனது வீட்டில் வியாழக்கிழமை இரவு மது அருந்தி கொண்டிருந்தாா். அப்போது, அவரது இளைய மகன் விஜயகுமாா், வீட்டில் வைத்து மது அருந்தக் கூடாது என்று கூறி, மது பாட்டிலை எடுத்து உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபித்துக் கொண்டு வெளியே சென்ற செல்வராஜ், தோட்டத்தில் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் செல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ஈரோட்டிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா்.
இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தற்கொலை எண்ணம் இருப்பவா்கள், 104 எண்ணை தொடா்பு கொள்ளும்போது, அவா்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும். மேலும், அடிக்கடி அவா்களிடம் தொடா்பு கொண்டு நண்பா்களாக பேசி, இயல்பு நிலைக்கு அவா்கள் திரும்ப வழிவகை செய்யப்படும்.