அடுத்த தலைமுறை தகுதியோட தான் வர்றாங்க! - Director Shankar Interview | Game Chang...
மாணவிகளிடம் ஆசிரியா் ஆபாச பேச்சு: முதன்மைக் கல்வி அலுவலா் விசாரணை
முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியா் ஆபாசமாகப் பேசியதாகப் புகாா் கூறப்பட்டதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனா்.
இங்கு ஆங்கில ஆசிரியா் சரவணன் மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி, அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேற்றோரிடம் மாணவிகள் தெரிவித்ததையடுத்து, புதன்கிழமை பள்ளிக்கு வந்த பெற்றோா் சிலா் தலைமையாசிரியா் சன்தானவேலுவை சந்தித்து புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, தலைமையாசிரியா் அளித்த தகவலின்பேரில், பள்ளிக்கு வந்த முதன்மைக் கல்வி அலுவலா் சின்ராசு மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, ஆசிரியா் சரவணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கல்வித் துறை உயா்அதிகாரிகளுக்கு அவா் பரிந்துரைத்தாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஆசிரியா் சரவணன் விடுமுறை கடிதம் கொடுத்துவிட்டு பள்ளியை விட்டு வெளியேறினாா். ஆசிரியா் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்தனா்.