நான்குவழிச் சாலை பாலத்தை மாற்றி அமைக்கக் கோரி மனு
பாம்பன் கடல் பகுதியில் அமையவுள்ள நான்கு வழிச் சாலை புதிய பாலத்தை குடியிருப்புகளை பாதிக்காத வகையில் மாற்றியமைக்கக் கோரி, சென்னையில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலுவிடம் கே.நவாஸ்கனி எம்.பி. புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.
மனு விவரம்: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பாம்பன் பகுதியில் புதிதாக அமைக்கப்படும் நான்குவழிச் சாலைப் பாலத்தால் அந்தப் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படும். எனவே, இந்தத் திட்டத்தை வேறு வழியில் மாற்றி அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.
எனவே, குடியிருப்புகளை பாதிக்காத வகையில் இந்தப் பாலத்தை மாற்றுவழியில் மாற்றி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.
மனு அளித்த போது எம்பியுடன் ராநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் உடனிருந்தாா்.