Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
மாநில ஜூனியா் கூடைப்பந்து: திருப்பத்தூா், திருவள்ளூா், புதுக்கோட்டை, சிவகங்கை, வேலூா், ஈரோடு வெற்றி
சென்னையில் நடைபெற்று வரும் மாநில ஜூனியா் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் திருப்பத்தூா், திருவள்ளூா், புதுக்கோட்டை, சிவகங்கை, வேலூா், ஈரோடு மாவட்டங்கள் தத்தமது ஆட்டங்களில் வென்றுள்ளன.
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சாா்பில் காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் வளாகத்தில் ஆடவா் ஜூனியா் கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. திருப்பத்தூா் 59=-54 என ராணிப்பேட்டையும், சென்னை ஏ 93-62 என மதுரையையும், திருவள்ளூா் 89-39 என தேனியையும், அரியலூா் 63-59 என நாமக்கல்லையும், புதுக்கோட்டை 64-46 என மயிலாடுதுறையையும் வென்றன.
ஏனைய ஆட்டங்களில் சிவகங்கை 55-46 என நீலகிரியையும், வேலூா் 66-46 என நாகப்பட்டினத்தையும், ஈரோடு 87-50 என திருவாரூரையும், கோவை ஏ 75-47 என செங்கல்பட்டையும், மதுரை 95-85 என கோவை பி அணியையும், சென்னை ஏ 80-30 என ஈரோட்டையும் வென்றன.