செய்திகள் :

Ilaiyaraja: "கோவையில் என் காலடி படாத இடமே கிடையாது" - பகிர்கிறார் இளையராஜா

post image

இசையமைப்பாளர் இளையராஜாவின் கான்சர்ட் நாளை கோவையில் நடக்கவிருக்கிறது.

அதற்காக கோவைக்கு விரைந்திருக்கிறார் இளையராஜா. இன்றைய தினம் கோவையில் ரோட்டரி கிளப் நடத்தும் விருது விழா நடைபெற்றது.

இளையராஜா
இளையராஜா

இந்த நிகழ்வில் இசைத்துறைக்கு இளையராஜா ஆற்றியிருக்கும் பங்களிப்பை பாராட்டி அவருக்கு விருது வழங்கப்பட்டது . இந்த நிகழ்வில் தனக்கும் கோவைக்குமான உறவு குறித்துப் பேசியிருக்கிறார்.

இளையராஜா பேசுகையில், "கோவையில் என்னுடைய காலடி படாத இடமே கிடையாது. கோவையில் என் ஹார்மோனியம் ஒலிக்காத தெருவே கிடையாது.

நான் பார்த்த கோவை வேறு. என்னுடைய ஹார்மோனியம் கோவையில் செய்யப்பட்டதுதான். இங்கிருந்து நான் வாங்கிய ஹார்மோனியத்தைதான் இன்றும் இசையமைக்கப் பயன்படுத்துகிறேன்.

கோவைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு எனச் சொல்லமுடியாது.

இளையராஜா
இளையராஜா

ஆனால், கோவையையும் என்னையும் பிரிக்க முடியாது. பேசுவதற்கு நான் பேச்சாளன் இல்லை.

நான் பாட்டாளி. பாட்டாளி என்றால் பாட்டுப் பாடுபவன். உழைக்கும் மக்கள் பாடும் பாட்டில் இருக்கும் பாட்டாளி நான். அவர்கள் படும் பாடு வேறு, அவர்கள் பாடு வேறு. என் பாடு பாட்டு," எனப் பேசினார்.

Krishna: நடிகர் கிருஷ்ணாவுக்குத் திருமணம் - வாழ்த்தும் பிரபலங்கள்!

நடிகர் 'கழுகு' கிருஷ்ணா நடிப்பில் கடந்த ஆண்டு 'பாராசூட்' வெப் சீரிஸ் வெளியாகியிருந்தது. இதைத்தாண்டி, கெளதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த 'ஜோஸுவா' திரைப்படமும் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது. இதை... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: "லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ படம்"- ஆமீர் கான் கொடுத்த அப்டேட்

ஆமீர் கான் நடித்திருக்கும் 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் இம்மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ரிலீஸையொட்டி படத்தைப் புரொமோட் செய்ய பிஸியாக இயங்கி வருகிறார் ஆமீர் கான். Coolie - Lo... மேலும் பார்க்க

Simran: "இன்று எங்களை விட உயரமாக நிற்கிறாய்!" - தன்னுடைய மூத்த மகன் குறித்து நடிகை சிம்ரன்

சிம்ரன், இந்தாண்டின் முதல் பாதி முடிவதற்குள்ளாகவே அடுத்தடுத்த படங்கள் மூலமாக அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சசிகுமாருடன் இவர் நடித்திருந்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்கு பெரும் வரவேற்பு க... மேலும் பார்க்க

கலைப்புலி தாணு வீட்டுத் திருமணம்: ஸ்டாலின், உதயநிதி, சூர்யா, SK - பங்கேற்ற பிரபலங்கள் | Photo Album

சச்சின் : `வெளிநாடுகளிலும் செம ரீச்; அடுத்த ரீரிலீஸ்..!’ - அஜித் பட அப்டேட் கொடுத்த கலைப்புலி தாணுசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பா... மேலும் பார்க்க

பேரன்பும் பெருங்கோபமும் விமர்சனம்: நம் பேரன்பைப் பெறுகிறதா ஆணவக்கொலைக்கான எதிரான இந்தப் படைப்பு?!

கிராமத்தில் சாதி அநீதிகளால் குடும்பத்தை இழந்த செவிலியர் ஜீவா (விஜித் பச்சன்), பல ஆண்டுகள் கழித்து அந்த அநீதிக்குக் காரணமாக இருந்த மூன்று நபர்களைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார். கடந்த காலத்தில் அவர் அனுப... மேலும் பார்க்க