செய்திகள் :

மீண்டும் மீண்டுமா? மத்திய அரசின் ரகசிய மெமோ! போலி என வெளியுறவு விவகாரத் துறை விளக்கம்

post image

புது தில்லி: வெளிநாடுகளில், காளிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை ஒழித்துக் கட்ட திட்டங்களை வகுக்குமாறு மத்திய அரசு, தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக ஒரு ரகசிய மெமோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

காளிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிரான திட்டங்கள் என்று வெளியாகியிருக்கும் அந்த ரகசிய மெமோவில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் காளிஸ்தானியர்கள் தற்போது தீவிர செயல்பாட்டில் உள்ளனர். வட அமெரிக்காவில் மட்டும் 10 லட்சம் சீக்கியர்கள் வாழ்கிறார்கள். காளிஸ்தான் பிரிவினைவாதிகளால் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் முழக்கங்கள், நாட்டுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. பல காளிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் இந்திய அரசுக்கு எதிரான பல நிலைப்பாடுகளை உருவாக்கி அதனை காளிஸ்தான் கொள்கைகளாக அறிவித்து வருகின்றன.

these organistions could be cultivated as vital force in the street confrontation with sikh extremeists, special efforts should be paid to establish cooperation with moderate sikhs, so as to integrate the neutral sikh community

ஆனால், வெளிநாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றிருக்கும் பல அமைப்புகளை, சீக்கிய தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் சக்தியாக உருவாக்க முடியும். அதுபோல, நடுநிலையாக வாழும் சீக்கிய சமூகத்தை ஒருங்கிணைத்து, அவர்கள் மூலமாக, மிதவாத சீக்கியர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களது மிதவாத சக்தியை மட்டுப்படுத்த சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

முதலில், இந்த ரகசிய மெமோ உண்மையானதா என்பது கேள்விக்குரியது. இந்த நிலையில்தான், இந்த ரகசிய மெமோ உண்மையல்ல என்று மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.

ஆனால், இதில் மிக முக்கிய விஷயம் என்னவென்றால், கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்தானதாக வெளியாகியிருக்கும் இந்த மெமோ, கடந்த ஆண்டே சமூக வலைதளங்களில் இதே வேகத்தில் பரவி, அதே வேகத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் போலியானது என்று விளக்கமும் கொடுத்துள்ளது.

இந்த ரகசிய மெமோ போலியானது, வேண்டுமென்றே தவறுதலாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற எந்த ரகசிய மெமோவும் அனுப்பப்படவில்லை என்று மத்திய வெளியுறவு விவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் கடந்த ஆண்டே விளக்கம் கொடுத்துள்ளார்.

ஆனால், மீண்டும் இந்த ஆண்டு தி ஸ்டார் பேனர் என்ற முகவரியில் அமன் சிங் என்பவர் இந்த ரகசிய மெமோவை மீண்டும் தற்போது எக்ஸ் பக்கத்தில் பதிவிட, அது வைரலாகி, விளக்கத்தையும் பெற்றுள்ளது.

அது மட்டுமல்லாமல், இந்தியா - கனடா இடையே தற்போது தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் உளவுத் துறை மூலம் இதுபோன்ற பொய்யான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படலாம் என்றும் மத்திய அரசு சந்தேகம் கொள்கிறது.

தங்களது நிலைத்தன்மையற்ற நாட்டின் நலனுக்காக இதுபோன்ற போலியான செய்திகளை சிலர் பரப்பலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

கடந்த செப்டம்பர் மாதம், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் நடந்த நிஜ்ஜார் கொலையில், இந்திய அதிகாரிகளின் பங்கு இருந்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு என்று இந்தியா மறுத்திருந்தது.

இந்த நிலையில்தான், வெளிநாடுகளில் காளிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முயற்சிக்குமாறு மத்திய அரசு அனுப்பியதாக ரகசிய மெமோ சமூக வலைதளத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணனின் நகல்..! பாடகர் சித்து மூஸேவாலாவின் சகோதரர் புகைப்படம் வெளியீடு!

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸேவாலாவின் சகோதர் புகைப்படத்தை அவரது பெற்றோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ... மேலும் பார்க்க

மும்பையில் சின்னத்திரை நடிகர் தூக்குப்போட்டுத் தற்கொலை!

மும்பையில் சின்னத்திரை நடிகர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.மும்பையில் மேற்கு புறநகரான கோரேகானில் உள்ள தனது வீட்டில் தொலைக்காட்சி நடிகர் ஒருவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் காவ... மேலும் பார்க்க

மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய காதலன்!

ஒடிஸாவில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஒடிஸாவின் கட்டாக் மாவட்டத்தில் தசரா பண்டிகையின்போது, 19 வயதான கல்லூரி மாணவியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, அந... மேலும் பார்க்க

வங்கதேசத்திற்கான மின் விநியோகத்தை 60 சதவிகிதம் துண்டித்த அதானி பவர்!

டாக்கா / பெங்களூரு: அதானி பவர் நிறுவனமானது அண்டை நாடான வங்கதேசத்திற்கு மின்சார விநியோகத்தை 60 சதவிகிதம் குறைத்துள்ளது. நிலுவைத் தொகையான ரூ.6750 கோடிக்கு மேல் (800 மில்லியன் டாலர்) வசூலிக்க தற்போது அத... மேலும் பார்க்க

ராகுல் காந்தி மட்டுமல்ல.. அவரின் 4-ஆம் தலைமுறையாலும் சட்டப்பிரிவு 370-ஐ கொண்டுவர முடியாது: அமித் ஷா!

சட்டப்பிரிவு 370-ஐ ராகுல் காந்தி மட்டுமல்ல, அவருக்குப் பின் வருங்கால சந்ததியினர் யாராலும் கொண்டுவர முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைக்கான தே... மேலும் பார்க்க

தவறான கொள்கைகள் பொருளாதாரத்தை முடக்கிவிடும்: பணமதிப்பிழப்பு குறித்து ராகுல்!

பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இந்தியா இன்று அதிக பணத்தைப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமரிசித்துள்ளார். நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்... மேலும் பார்க்க