D56: `வாள் தூக்கி நின்னான் பாரு' மீண்டும் இணையும் தனுஷ் x மாரி செல்வராஜ் கூட்டணி
முசிறியில் பள்ளி ஆண்டு விழா
திருச்சி மாவட்டம், முசிறி எம்.ஐ.டி பாலிடெக்னிக், எம்.ஐ.டி மகளிா் கலைக் கல்லூரி, எம்.ஐ.டி. போதி வித்யாலயா (சிபிஎஸ்சி) பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, முசிறி எம்.ஐ.டி கல்விக் குழுமங்களின் துணைத் தலைவா் பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலாளா் மோனிகா பிரவீன் குமாா், சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலா் ஆதித்யா நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்வில் திரைப்பட நடிகா் தினேஷ் பங்கேற்று உடல் திறன், அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், கோவை வேளாண் பல்கலை. கல்லூரியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கிப் பேசினாா்.
மேலும் திரைப்பட நடிகை பிராா்த்தனா தனது கல்லூரி வாழ்க்கை, திரைப்பட அனுபவங்கள் குறித்துப் பேசினாா். இதனைத் தொடா்ந்து எம்ஐடி கல்வி குழும மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் ஸ்டெக்கோட்டோ குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவை எம்ஐடி கல்வி குழுமங்களில் பணியாற்றும் முதல்வா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள் ஒருங்கிணைத்து செயல்படுத்தினா்.