ஆர்சிபியின் அபார பந்துவீச்சில் பணிந்த பஞ்சாப் கிங்ஸ்; 102 ரன்கள் இலக்கு!
மே 29, 30ல் நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்! இன்று 8 மாவட்டங்களில் கனமழை!
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மே 29, 30 ஆகிய 2 நாள்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவியுள்ளது. குறிப்பாக இதனால் மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 3 நாள்கள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நாளையும் நாளை மறுநாளும்(மே 29, 30) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (மே 28) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் குமரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மே 29, 30 தேதிகளில் நீலகிரி, கோவையில் அதிகனமழையும் தேனி, தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் மிக கனமழையும் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) May 28, 2025