செய்திகள் :

மோகன்லாலுக்கு வில்லனாகும் வாய்ப்பை மறுத்த ஜீவா!

post image

நடிகர் மோகன்லால் படத்தில் வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை ஜீவா மறுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜீவாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக சரியான வெற்றிப்படங்கள் அமையவில்லை. இவர் நடித்த பிளாக் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வரவேற்பைப் பெற்றது.

இதையும் படிக்க: ஓடிடியில் சங்கராந்திகி வஸ்துனம்!

ஆனால், தற்போது பா. விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடித்த அகத்தியன் விமர்சன ரீதியாகவே எதிர்மறையான கருத்துகளைப் பெற்றுள்ளதால் இப்படம் தோல்வியடையும் என்றே தெரிகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற ஜீவா, “நிறைய இயக்குநர்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க அழைத்துக்கொண்டே இருக்கின்றனர். முக்கியமாக, மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் நடிகர் மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி அழைத்திருந்தார். ஆனால், பாதி மொட்டை அடிக்க வேண்டும் என சொன்னதால் வேண்டாம் என விலகினேன்” என்றார்.

மோகன்லால் - ஜீவா இணைந்து அரண் என்கிற ராணுவ பின்னணி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லாபம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.03-03-2025திங்கள்கிழமைமேஷம்:இன்று குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவ... மேலும் பார்க்க

தேசிய மகளிா் சீனியா் ஹாக்கி: தெலங்கானா, தில்லி வெற்றி

தேசிய சீனியா் மகளிா் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தெலங்கானா, தில்லி அணிகள் தத்தமதுஆட்டங்களில் வெற்றி பெற்றன. ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவில் 15-ஆவது தேசிய சீனியா் மகளிா் ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்று ... மேலும் பார்க்க

சென்னை-நாா்த் ஈஸ்ட் யுனைடெட் இன்று மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒருபகுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையும் முனைப்பில் நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணி திங்கள்கிழமை சென்னையின் எஃப்சி அணியுடன் மோதுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை நேரு வ... மேலும் பார்க்க

துளிகள்...

சென்னையில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான எஸ்எஸ்என் கோப்பை அகில இந்திய பாட்மின்டன் போட்டியில் ஆடவா், மகளிா் இரட்டைப் பட்டம் வென்ற எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணியினா். --------------------------------- ஐசிசி ச... மேலும் பார்க்க

தாமஸ் மெக்ஹாக்குக்கு முதல் பட்டம்

மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றார் செக். குடியரசு வீரர் தாமஸ் மெக்ஹாக். மெக்ஸிகோவின் அகாபுல்கோ நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செக். குடியரசின் தாமஸ் மெக்ஹாக்கும்... மேலும் பார்க்க

சிகரெட் பிடிக்கும் காட்சியில் ஜோதிகா!

நடிகை ஜோதிகா இணையத் தொடர் ஒன்றில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார்.நடிகை ஜோதிகா மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடித்து வருகிறார். இறுதியாக, தமிழில் உடன் பிறப்பே படத்தில் நடித்தவர், அடுத்ததாக மல... மேலும் பார்க்க