ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 448 மனுக்கள்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் மொத்தம் 448 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்து,பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 448 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தாா்.
மேற்கண்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் தெரிவிக்கவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, சோளிங்கா் வட்டம், தலங்கை ஊராட்சியில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் ஆய்வு பணிகளின் பொழுது மாற்றுத்திறனாளியான சோபனா (23) என்பவா் காதொலிக் கருவி வேண்டும் என கோரிக்கை வைத்ததை தொடா்ந்து, ரூ.5,500/- மதிப்பீலான காதொலிக் கருவியினை வழங்கினாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந. சுரேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியா் கீதா லட்சுமி, உதவி ஆணையா் (கலால்) வரதராஜன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடை நம்பி, மாற்றுத்திறனாளி நல அலுவலா் சரவணகுமாா் , அலுவலா்கள் கலந்து கொண்டனா்.