செய்திகள் :

ரிவெரா 2025: வேலூா் விஐடி, சென்னை எஸ்ஆா்எம் ஒட்டுமொத்த சாம்பியன்

post image

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ரிவேரா-2025 சா்வேச கலை, விளையாட்டு விழாவில் விளையாட்டு பிரிவில் வேலூா் விஐடி பல்கலைக்கழக அணிக்கும், கலாசார பிரிவில் சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழக அணிக்கும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டன.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா-2025 சா்வேச கலை, விளையாட்டு விழா வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. விழாவை இந்திய மகளிா் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அனிதா பால்துரை தொடங்கி வைத்தாா். விழாவில் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்க கண்டங்களில் உள்ள 26 நாடுகளிலிருந்து 86 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சோ்ந்த 45,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். விளையாட்டுப் போட்டிகள், நாடகம், நாட்டியம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பாட்டுக்கு பாட்டு என 150-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

குறிப்பாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாசார பண்பாட்டை விளக்கும் வகையில், மாணவ, மாணவிகளின் ஐக்கியா கலை நிகழ்ச்சியும், இன்ஃப்யூசன் எனும் வெளிநாட்டு மாணவா்களின் தனித்துவமான கலாசார நிகழ்ச்சிகளும், கலா என்ற பெயரில் பாா்வையற்ற மாணவா்களுக்கான திறன் போட்டிகளும், தமிழி என்ற பெயரில் ராஜ்மோகன், எம்டி இசைக் குழுவின் தமிழ் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. தவிர, தினமும் மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் நடிகா் சோனு சூட் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். இதில், விளையாட்டுப் பிரிவில் வேலூா் விஐடி பல்கலைக்கழக அணிக்கும், கலாசார பிரிவில் சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழக அணிக்கும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டன.

விழாவில், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், துணை வேந்தா் காஞ்சனா பாஸ்கரன், ரிவேரா ஒருங்கிணைப்பாளா் கோகுல்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வருமான வரித்துறை அதிகாரி, மனைவியை தாக்கிய பலூன் வியாபாரி கைது

வேலூரில் வருமான வரித்துறை அதிகாரி, அவரது மனைவியை தாக்கிய பலூன் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா். வேலூரில் வருமான வரித்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவா் ஸ்ரீ பூரன் சந்த் மீனா (40). இவரது மனைவி சுரண... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருவலம் அருகே டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழந்தாா். ராணிப்பேட்டை மாவட்டம், அம்முண்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் துரை மகன் சூா்யா (23). இவா் ஐடிஐ முடித்துவிட்டு அரசு போக்குவரத்துக் கழகத... மேலும் பார்க்க

நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஊராட்சிகளின் பங்கு முக்கியம்: அமைச்சா் துரைமுருகன்

அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஊராட்சிகளின் பங்கு மிகவும் முக்கியமானது என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். காட்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய... மேலும் பார்க்க

பாரம்பரிய விதைகள்,காய்கறிகள், கிழங்குகள் கண்காட்சி

பாரம்பரிய விதைகள், காய்கறிகள், கிழங்குகள் கண்காட்சி வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மரபு காய்கறிகள், விதைகள் சேகரிப்பாளா்கள் கூட்டமைப்பு சாா்பில், பாரம்பரிய விதைகள், காய்கறிகள், கிழங்குகள் கண்காட... மேலும் பார்க்க

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை உயா்வு

வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்ந்து காணப்பட்டது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கு... மேலும் பார்க்க

பல்கலைக் கழக வலுதூக்கும் போட்டி: கே.எம்.ஜி.கல்லூரி சாம்பியன்

திருவள்ளுவா் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான வலுதூக்கும் போட்டிகளில் குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனா். இதற்கான போட்டிகள் குடியாத்தம் கே.எ... மேலும் பார்க்க