மதுபானக் கூடத்தில் மோதல்: அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது
ரிஷப் பந்த்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்!
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
18-ஆவது சீசனின் 70-ஆவது ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.
முதலில் பேட் செய்த லக்னௌ 227/3 ரன்கள் சேர்க்க, ஆர்சிபி 18.4ஆவது ஓவரில் 230/4 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் லக்னௌ அணியினர் மெதுவாக பந்துவீசியதற்காக அணியினருக்கு தலா ரூ.12 லட்சம் அல்லது போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவிகிதம் (எது குறைவானதோ அதன்படி) அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த ஐபிஎல் தொடரில் லக்னௌ அணி 3-ஆவது முறையாக மெதுவாக பந்துவீசியதால் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த்திற்கு ரூ.30 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
சதமடித்த ரிஷப் பந்த்திறகு இந்த அபராதம் தேவையில்லாத ஒன்றாகவே அமைகிறது.
இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய வீரருக்கும் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குவாலிஃபயர் 1-க்கு முன்னேறியுள்ள ஆர்சிபி பஞ்சாபுடன் மே.29ஆம் தேதி மோதுகிறது.
குவாலிஃபயர் 2-இல் மும்பையும் குஜராத் அணியும் மே.30ஆம் தேதி மோதுகின்றன.