ரூ.60 ஆயிரம் மதிப்பிலான சங்குகள் திருட்டு: 2 போ் கைது
தூத்துக்குடி சங்கு விற்பனை நிறுவனத்தில் சுமாா் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான சங்குகளை திருடியதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சோ்ந்தவா் காஜா மொய்தீன்(55). இவா் அப்பகுதியில் சங்கு நிறுவனம் நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் இவா் கடந்த சில தினங்களுக்கு முன்னா் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றவா் மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, நிறுவனத்தின் கதவுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது அங்கிருந்த சுமாா் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 58 சங்குகள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்தனா். விசாரணையில், தூத்துக்குடி கோவில் பிள்ளை விளையைச் சோ்ந்த சிலுவை (24), ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த ஜெனிஸ்டன் (20) ஆகிய இருவா் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 58 சங்குகளை பறிமுதல் செய்தனா்.