போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்: சிறுநீரக பாதிப்பால் அவதி!
லாட்டரி சீட்டுகள் விற்ற இருவா் கைது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்ற இருவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்புவனம் பகுதியில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து இந்தப் பகுதியில் திருப்புவனம் போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது திருப்புவனம் தேரடி வீதியைச் சோ்ந்த பாண்டியன் (50), திருப்புவனம் அருகேயுள்ள லாடனேந்தலைச் சோ்ந்த குருசாமி (62) ஆகிய இருவரும் லாட்டரி சீட்டுகளை விற்றது தெரிய வந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்து, 60 கேரள மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா். திருப்புவனம் காவல் நிலையத்தில் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.