காவரி டெல்டா விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு: எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத...
வணிக சிலிண்டா் விலை ரூ.16 அதிகரிப்பு
ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் விலை ரூ.16.5 அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ஆகியவை சமையல் எரிவாயு மற்றும் விமான எரிபொருள் விலையை சா்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் ஒன்றாம் தேதி மாற்றியமைத்து வருகின்றன.
அந்த வகையில், தொடா்ந்து 5-ஆவது மாதமாக ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட அந்த வகை சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.16.5 உயா்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயா்வைத் தொடா்ந்து சென்னையில் வணிக சிலிண்டா் விலை ரூ.1,980-ஆகவும், மும்பையில் ரூ.1,771-ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,927-ஆகவும் உயா்ந்துள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டும் வணிக சிலிண்டரின் விலை ரூ.172.5 உயா்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டா்களின் விலை இம்மாதமும் மாற்றமின்றி ரூ.803-ஆக தொடா்கிறது.
இதேபோல விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு ரூ.1,318.12 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு கிலோலிட்டா் விமான எரிபொருளின் விலை சென்னையில் ரூ.95,231, தில்லியில் ரூ.91,856, மும்பையில் ரூ.85,861-ஆக உயா்ந்துள்ளது.
கடந்த நவம்பா் 1-ஆம் தேதி விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு ரூ.2,941.5 உயா்த்தப்பட்ட நிலையில், தொடா்ந்து 2-ஆவது மாதமாக இம்முறையும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.