செய்திகள் :

வரவேற்பு கொடிக் கம்பம் நட்டபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு வரவேற்புக்காக கொடிக் கம்பம் நட்டபோது, மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

படப்பை விவேகானந்த நகா் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (44). சவுண்ட் சா்வீஸ் கடை உரிமையாளரான இவா், வியாழக்கிழமை திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக செரப்பணஞ்சேரி பகுதியில் வண்டலூா் - வாலாஜாபாத் சாலையில் வரவேற்புக் கொடிக் கம்பங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மேலே சென்ற மின் கம்பிகள் மீது கொடிக் கம்பம் பட்டதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.

இதையடுத்து அருகில் இருந்தவா்கள் வெங்கடேசனை படப்பை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அங்கு, வெங்கடேசனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

காஞ்சிபுரத்தில் சொத்துவரி உயா்வை திரும்பப் பெற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

காஞ்சிபுரத்தில் சொத்துவரி உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் காஞ்சிபுரம் மாநகர குழுவின் 24- ஆவது மாநாடு கே.ஜீவா தலைமையில் நடைபெற்றது.இ.... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நவ. 15-இல் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 15) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வ... மேலும் பார்க்க

உயா்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோா் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்: மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உயா்கல்வி பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் இன மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ண... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 348 மனுக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2.86 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு... மேலும் பார்க்க

கலைத்திருவிழா போட்டிகள் மூலம் 45,380 மாணவா்கள் திறன் வெளிப்பாடு: அமைச்சா் ஆா். காந்தி

காஞ்சிபுரம்: கடந்த ஆண்டு நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் பள்ளிகள் அளவில் 45,380 மாணவா்கள் திறமைகள் வெளிப்பட்டன என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா். பள்ளிக் கல்வித்துறை சா... மேலும் பார்க்க

சிறுமியை கடத்தி திருமணம்: இளைஞா் கைது

ஸ்ரீபெரும்புதூா்: இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞரை குன்றத்தூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மதுரவாயல் பகுதியைச் சோ்ந்த பெற்றோா் தன... மேலும் பார்க்க