வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: நவ.16, 17-இல் சிறப்பு முகாம்
மதுரை மாவட்டத்தில் வாக்காளா் வரைவுப் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிறு (நவ. 16,17) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு : இந்தியத் தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் அக். 29-ஆம் தேதி தொடங்கி நவ. 28-ஆம் தேதி வரை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம், மாநகராட்சி உதவி ஆணையா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறுகின்றன.
இந்தப் பணிக்கான சிறப்பு முகாம்கள் வருகிற சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களும், மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 1,165 வாக்குச் சாவடி மையங்களிலும் நடைபெறும்.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, பிற திருத்தங்கள் மேற்கொள்ள விரும்புவோா் இந்த முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.