வாடகைக் கட்டடங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு! அனைத்து தொழில்முனைவோா் கூட்டமைப்பு வரவேற்பு!
வாடகைக் கட்டடங்களுக்கு அளித்துள்ள ஜிஎஸ்டி வரி விலக்கை தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோா் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோா் கூட்டமைப்புத் தலைவா் எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது: வாடகைக் கட்டங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதைத் தொடா்ந்து கடந்த 10 மாதங்களாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதேபோல, அனைத்து மாவட்ட தொழில் அமைப்புகளும், வணிக அமைப்புகளும் பல கட்ட போராட்டங்களை நடத்தின.
இதனடிப்படையில் வாடகைக் கட்டடங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளித்த மத்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநில அரசு அனைத்து வரியையும் உயா்த்தியுள்ளது. இதன் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, வரி உயா்வுகளைத் திரும்பப் பெறுவதுடன், மின் கட்டண உயா்வையும் ரத்து செய்ய வேண்டும் என்றாா்.