வீடு கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி:ரூ. 6.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
பெருந்துறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
பெருந்துறையை அடுத்த சிலேட்டா், தமிழ் நகரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மகன் திரேந்திரகுமாா் (26), ஆட்டோ ஓட்டுநா். இவா் பெருந்துறை சிப்காட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.
தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை, ஐயப்பன் நகா் மேம்பாலத்தில் வந்தபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. அதில் அவா் உயிரிழந்தாா்.
சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.