தீபாவளி: காளி பூஜை, எமனுக்கு விளக்கு, முன்னோர் வழிபாடு; இந்தியா முழுவதும் வேறுபட...
விருதுநகர்: பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் 2 நாட்களில் 18 அடி உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளான கூமாபட்டி, கான்சாபுரம், தம்பிபட்டி, மகாராஜபுரம், கோட்டையூர், அத்திகோயில் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது.
இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 18 அடியாக இருந்தது.

18 அடியாக இருந்த பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 36 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 649 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் இரண்டு நாட்களில் 18 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.