செய்திகள் :

விலங்குகள் பாதுகாப்பு பிஷ்னோய் சமாஜ் - சிறையில் இருந்தபடியே இளைஞரணி தலைவரானார் லாரன்ஸ் பிஷ்னோய்!

post image

ராஜஸ்தான் மாநிலத்தில் கணிசமாக வாழும் பிஷ்னோய் இன மக்கள் வன விலங்குகள் மற்றும் மரங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அவர்கள் பிளாக்பக் வகை மான்களை தங்களது தெய்வமாக கருதுகின்றனர். நடிகர் சல்மான் கான் அந்த மானை வேட்டையாடியதால் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரி டெல்லியை சேர்ந்த மாஃபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறான். சல்மான் கானை கொலை செய்யவும் முயன்றான். லாரன்ஸ் பிஷ்னோய் மீது பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் 30க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. தற்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அதோடு கனடாவில் இந்திய உளவுத்துறை சார்பாக இந்தியாவுக்கு எதிராக செயல்படுபவர்களை கொலை செய்வதாக லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது கனடா பிரதமர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இந்நிலையில் லாரன்ஸ் பிஷ்னோய் விலங்குகள் பாதுகாப்பு இளைஞரணி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அகில இந்திய விலங்குகள் பாதுகாப்பு பிஷ்னோய் சமாஜ் தலைவர் இந்தர்பால் பிஷ்னோய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''அகில இந்திய விலங்குகள் பாதுகாப்பு பிஷ்னோய் சமாஜ் கூட்டத்தில் லாரன்ஸ் பிஷ்னோயை அகில இந்திய விலங்குகள் பாதுகாப்பு பிஷ்னோய் சமாஜ் இளைஞரணி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. விலங்குகள், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் 1730-ல் ராஜஸ்தானில் கெஜாரி மரங்களைக் காப்பாற்ற தங்கள் உயிரைத் தியாகம் செய்த அமிர்தா தேவி பிஷ்னோய் மற்றும் 363 பிஷ்னோயிகளின் பணியை முன்னெடுத்துச் செல்வதும், பாரம்பரியத்தைப் பாதுகாப்பதும் உங்கள் பொறுப்பு''என்று குறிப்பிட்டார்.

லாரன்ஸ் பிஷ்னோய்

லாரன்ஸ் பிஷ்னோய் உறவினர் ரமேஷ் பிஷ்னோய் இது குறித்து வெளியிட்ட வீடியோவில்,'' பிஷ்னோய் இன மக்கள் லாரன்ஸ் பிஷ்னோயை விலங்குகள் பாதுகாப்பு பிரிவு தலைவராக நியமிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்''என்று குறிப்பிட்டார். லாரன்ஸ் பிஷ்னோய் சொந்த ஊர் பஞ்சாப் மாநிலம் துத்ரன்வாலி கிராமம் ஆகும். பஞ்சாப் பாடகர் சிது மூஸ்வாலா மற்றும் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கனடாவில் காலிஸ்தான் இனத்தலைவர் ஹர்தீப் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதிலும் தொடர்பு கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் ராஷ்ட்ரிய கர்னி சேனா தலைவர் ராஜ் ஷெகாவத் வெளியிட்ட அறிக்கையில் லாரன்ஸ் பிஷ்னோயை கொலை செய்யும் போலீஸ் அதிகாரிக்கு 11 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருந்து கொண்டே வெளியில் இருக்கும் தனது 700 கூட்டாளிகள் மூலம் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Adani: "இந்தியாவில் சோலார் மின் திட்டங்களைப் பெற லஞ்சம்" - அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் புகார்

தொழிலதிபர் கெளதம் அதானி மீது அடிக்கடி புகார்கள் வந்தாலும் அவை ஓரிரு நாளில் காணாமல் போய்விடுவது வழக்கமாக இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி அதானி மீது புகார்கள் கூறினாலும் அவை எடு... மேலும் பார்க்க

எலான் எனும் எந்திரன் 3: 1999-லேயே Elon Musk-க்கின் கனவுக்கு உயிர் கொடுத்த `X.com’

1990களின் மத்தியிலேயே இமெயில் மூலம் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகமாகிவிட்டது என்றாலும், அத்தனை பிரபலமாகவில்லை. கனடா நாட்டைச் சேர்ந்த இன்டராக் (Interac) என்கிற நிறுவனம் மெயில் மூலம் பணப்ப... மேலும் பார்க்க

திருமண ஊர்வலத்தில் பொழிந்த `பண' மழை... ரூ.20 லட்சத்தை முண்டியடித்துக் கொண்டு அள்ளிச் சென்ற மக்கள்!

ஒவ்வொருவரும் விதவிதமாக திருமணத்தை நடத்துவது வழக்கம். உத்தரப்பிரதேசத்தில் நடந்த திருமணம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. அதோடு அனைவராலும் பேசப்படும் ஒரு திருமணமாகவும் மாறி இருக்கிறது. அந்த... மேலும் பார்க்க

ரூ.15 கோடி பட்டுவாடா? - வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ.5 கோடி கொண்டுவந்தாரா பாஜக தலைவர்?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தீவிர பிரசாரம் செய்ததோடு அனைத்து பத்திரிகைகளிலும் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக... மேலும் பார்க்க

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு: நீதிமன்றம் குறிப்பிட்ட `சமரச மையம்’ என்றால் என்ன?

நடிகர் ஜெயம் ரவி அவரின் மனைவி ஆர்த்தி இருவரும் பிரிந்து வாழ்வது அனைவரும் அறிந்ததே. முதலில் ஜெயம் ரவி தாங்கள் பிரிந்து வாழ்வதாக அறிவிக்க, 'அது என்னுடன் பேசி எடுக்கப்பட்ட முடிவல்ல. என்னால் அவரைத் தொடர்ப... மேலும் பார்க்க

சென்னையில் கூடைப்பந்து வீராங்கனை திடீர் மரணம்; சிக்கன் ரைஸ்தான் காரணமா? போலீஸ் தீவிர விசாரணை

கோவையைச் சேர்ந்த எலினா லாரெட் என்ற 15 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்புப் படித்து வருகிறார். சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து ப... மேலும் பார்க்க