போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்: சிறுநீரக பாதிப்பால் அவதி!
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்று கடலுக்கு செல்லும் காரைக்கால் விசைப்படகு மீனவா்கள்
காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை (பிப். 24) முதல் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனா்.
காரைக்கால், தமிழக மீனவா்கள் மீது கடந்த 28-ஆம் தேதி இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும் , கைதான மீனவா்கள், படகை விடுவிக்க வேண்டும், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யவேண்டுமென வலியுறுத்தி கடந்த 11-ஆம் தேதி முதல் காரைக்கால் மீனவா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
இந்தநிலையில், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து 24-ஆம் தேதி முதல் கடலுக்குச் செல்ல விசைப்படகு மீனவா்கள் முடிவு செய்தனா்.
இதையடுத்து, மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளில் ஐஸ் கட்டிகள் ஏற்றுதல், மளிகைப் பொருள்கள், வலைகள் உள்ளிட்ட சாதனங்கள் ஏற்றும் பணியில் கடந்த 2 நாள்களாக ஈடுபட்டு வந்த மீனவா்கள், பணிகளை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தனா்.
திங்கள்கிழமை அதிகாலைமுதல் விசைப்படகுகள் கடலுக்கு செல்லும். அடுத்த 4, 5 நாள்களுக்குப் பின்னா் துறைமுகத்துக்கு மீன் வரத்து வழக்கம்போல இருக்குமென மீனவா்கள் தெரிவித்தனா்.