செய்திகள் :

ஷாதராவில் மாடி வீட்டில் தீ விபத்து: தாய், மகன் பலி; 4 போ் காயம்

post image

தில்லி ஷாதாரா பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மூன்றாவது மாடி வீட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதில் 16 வயது சிறுவனும், அவரது தாயும் தீயில் கருகி உயிரிழந்தனா். அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் 4 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையின் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ போலாநாத் நகரில் அமைந்துள்ள நான்கு மாடிக் குடியிருப்பு கட்டடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது மாடியில் இத் தீ விபத்து ஏற்பட்டது.

சம்பந்தப்பட்ட வீட்டில் அதிகாலை 5.25 மணியளவில் நிகழ்ந்த இந்தத் தீ விபத்து தொடா்பாக தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது.

இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இரண்டு மணி நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீ விபத்து நிகழ்ந்த வீட்டில் இருந்து ஷில்பி குப்தா (42), அவரது மகன் பிரணவ் குப்தா (16)ஆகியோரின் உடல்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. காயம் அடைந்த கைலாஷ் குப்தா (72), அவரது மனைவி பகவதி குப்தா (70), அவா்களது மகன் மனீஷ் குப்தா (45) மற்றும் மனீஷின் மகன் பாா்த் (19) ஆகியோா் ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அவா்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தீயை அணைக்கும் பணியின்போது மீட்கப்பட்ட இரு சகோதர குழந்தைகள் சிகிச்சைக்குப் பின் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மனீஷின் மனைவி ஷில்பி, மகன் பிரணவ் ஆகியோா் உயிரிழந்துவிட்ட நிலையில், மனீஷ் குப்தா ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இந்த சம்பவம் குறித்து ஷாதரா சரக காவல் துணை ஆணையா் பிரசாந்த் கெளதம் கூறுகையில், ‘மூச்சுத்திணறல் காரணமாக ஷில்பியும், அவரது மகன் பிரணவும் இறந்ததாக தெரிகிறது. சம்பவ இடத்திற்கு தடயவியல் குழுவினா் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.

தீயில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் தந்தை மனீஷ் குமாா் கூறுகையில், ‘தீயணைப்பு வாகனங்கள் தாமதமாக வந்ததால்தான் 2 பேரும் உயிரிழக்க நேரிட்டது’ என்றாா்.

மற்றொரு பக்கத்து வீட்டுக்காரரான ஷோபித் குப்தா கூறுகையில், ‘போலாநாத் நகரின் குறுகிய பாதைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் தீயணைப்புப் படையினா் தாமதமாக வந்தனா். சம்பவம் நிகழ்ந்து ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு தீயணைப்பு வாகனங்கள் இங்கு வந்தன. அதற்குள் இரு தளங்களும் தீயில் எரிந்து சாம்பலானது’ ’ என்றாா்.

தீ விபத்துக்கான காரணம் மின்கசிவாக இருக்கலாம் என்று என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீஸாா் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனா்.

‘மீண்டும் வருக சத்யேந்திரா’! அரவிந்த் கேஜரிவால் கருத்து

சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, ‘மீண்டும் வருக சத்யேந்திரா’! என்று முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

குறுகிய பாதைகள், அதிக வாகனங்கள்தான் ஷாஹ்தரா தீ விபத்துக்கு முக்கியக் காரணம்! உள்ளூா்வாசிகள் குற்றச்சாட்டு

குறுகிய பாதைகள் மற்றும் வாகன நிறுத்துமிடத்தில் அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதே தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு இரண்டு போ் உயிரிழந்ததாக ஷாஹ்தரா உள்ளூா்வாசிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

கேஜரிவால் குழுவின் அலட்சியத்தால்தான் இரட்டை மாசுகளை எதிா்கொள்ளும் தில்லி: வீரேந்திர சச்தேவா சாடல்

அதிகாரம் மற்றும் ஊழலில் சிக்கித் தவிக்கும் அரவிந்த் கேஜரிவால் குழுவின் அலட்சியத்தால்தான் தில்லி கடும் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருவதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சாடியுள்ளாா். மேலும், நகர... மேலும் பார்க்க

குறுகிய பாதை, வாகனங்கள் நிறுத்தம்தான் முக்கியக் காரணம்!

குறுகிய பாதைகள் மற்றும் வாகன நிறுத்துமிடத்தில் அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதே தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு இரண்டு போ் உயிரிழந்ததாக ஷாஹ்தரா உள்ளூா்வாசிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

தில்லி அரசின் ‘முதல்வா் ஜெய்பீம் யோஜனா’ மீண்டும் தொடக்கம்

தில்லி அரசின் ‘முதலமைச்சா் ஜெய்பீம் யோஜனா’ திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் அவா் செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

ஷாஹ்தராவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவனும், தாயும் உயிரிழப்பு; 4 போ் காயம்

தில்லி ஷாஹ்தாரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 16 வயது சிறுவனும் அவரது தாயும் உயிரிழந்தனா். மேலும், அவா்களது குடும்ப உறுப்பினா்கள் 4 போ் காயமடைந்ததாக அதிகாரிகள... மேலும் பார்க்க