வெளியே வந்த பூனை: குடியரசு துணைத்தலைவர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. பதில்!
ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 6 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. தில்லி மற்றும் மும்பை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதையும் படிக்க: முக்கிய வீரரின்றி இந்தியாவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதன் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதன் இரண்டாவது போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நாளை சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் பெங்களூரு அணி உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் எல்லிஸ் பெரி, ராகவி பிஸ்ட், ரிச்சா கோஷ் மற்றும் கனிகா அஹுஜா ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர்.
இதையும் படிக்க:பாபர் அசாம் அரைசதத்தினால் தோல்வியடைந்த பாகிஸ்தான்..! முன்னாள் கேப்டன் கடும் விமர்சனம்!
மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.