பெங்களூர் வரை ரோடு மோசம்! Goa Ride Day 01 | Chennai to Davanagere | Royal Enfiel...
ஹிந்து அல்லாத ஊழியர்களை விருப்ப ஓய்வு பெற திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தல்!
ஹிந்து அல்லாத ஊழியர்களை விருப்ப ஓய்வு அல்லது வேறு துறைக்கு மாற்றிக் கொள்ள திருப்பதி தேவஸ்தான வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பதி கோயிலில் வழங்கப்படும் உலகப் பிரசித்தி பெற்ற லட்டுக்களில், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு நிர்வாகத்தில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை சுமத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஹிந்து அல்லாத ஊழியர்களை வேறு துறைக்கு மாற்ற ஆந்திர அரசிடம் பரிந்துரை வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவராக பிஆர் நாயுடு இந்த மாத தொடக்கத்தில் பொறுப்பேற்ற நிலையில், நேற்று திருமலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில், திருப்பதியில் பணிபுரியும் ஹிந்து அல்லாத பிற மதத்தைச் சேர்ந்தவர்களை வேறு துறைகளுக்கு மாற்ற ஆந்திர அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களை விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்த திட்டம்: டிரம்ப்
முன்னதாக தேவஸ்தானத்தின் தலைவராக பொறுப்பெற்றதுடன், திருமலையில் பணிபுரியும் அனைவரும் ஹிந்துவாக இருக்க வேண்டும். இதுவே எனது முதல் முயற்சி எனத் தெரிவித்திருந்தார்.
திருப்பதி தேவஸ்தானத்தில் 7,000 நிரந்தர ஊழியர்கள் பணிபுரியும் நிலையில், அவர்களில் 300 பேர் பிற மதத்தை சார்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 14,000 ஒப்பந்த தொழிலாளர்களில் எத்தனை பேர் ஹிந்து அல்லாதவர்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை.