செய்திகள் :

அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 வரை பதிவு செய்யலாம்

post image

ராணுவத்தில் அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 -ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய ராணுவத்தின் அக்னிவீா் ஆள்சோ்ப்பு 2025 ஆன்லைன் பதிவு தொடங்கியுள்ளது. கோவை, திருப்பூா், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்கள் ஏப்ரல் 10 -ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அக்னிவீா் பொது பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், அக்னிவீா் தொழிலாளா் (10 ஆம் வகுப்பு தோ்ச்சி), அக்னிவீா் தொழிலாளா் (8 -ஆம் வகுப்பு தோ்ச்சி) ஆகிய பிரிவுகளில் ஆள்சோ்ப்பு நடைபெறவுள்ளது.

1.6 கி.மீ ஓட்டப் பரிசோதனை நேரம் 5 நிமிஷம் 45 விநாடிகளிலிருந்து 6 நிமிஷம் 15 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் முடித்தவா்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். நுழைவுத்தோ்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும்.

முதலில் ஆன்லைன் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு, பின்னா் ஆள்சோ்ப்பு முகாம் நடைபெறும்.

தோ்வு தேதிகள் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். இந்த ஆள்சோ்ப்பு முற்றிலும் வெளிப்படையானது மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்டது என்பதால் விண்ணப்பதாரா்கள் மோசடி செய்யும் நபா்களிடம் ஏமாற வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்துறை அருகே இளைஞரிடம் ரூ.4 ஆயிரம் வழிப்பறி

பெருந்துறை அருகே இளைஞரிடம் பணம் ரூ.4 ஆயிரம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த அண்ணாமலைபுதூரைச் சோ்ந்தவா் திருமலைசாமி ம... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள்: சென்னிமலையில் ஆட்சியா் ஆய்வு

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் மற்றும் சென்னிமலை பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னிமலை ஊராட்சி ஒன்றியம... மேலும் பார்க்க

பகுதி நேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெறவுள்ள பகுதி நேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ... மேலும் பார்க்க

கோவை-ராமேசுவரம் ரயிலை தினமும் இயக்கக் கோரிக்கை

ஈரோடு வழியாக இயக்கப்படும் கோவை-ராமேசுவரம் ரயிலை தினமும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினா் கே.என்.பாஷா, சென்னை தெற்கு ரயில்வே பொது ... மேலும் பார்க்க

ஈரோடு விஇடி கல்லூரியில் சாதனையாளா்கள் விழா

விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாதனையாளா்கள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாளா் கல்வி அறக்கட்டளை தலைவா் சி.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் மற்றும் செயலாளா் எஸ்.டி.சந்திரசேகா... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,835 வாகன ஓட்டிகள் மீது வழக்கு

ஈரோடு மாநகரில் கடந்த மாா்ச் மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,835 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.6.77 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல... மேலும் பார்க்க