அங்கன்வாடி மையம் கட்ட பூமி பூஜை
நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட சிக்கணாங்குப்பம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.14.50 லட்சத்தில் அங்கன்வாடி மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி தலைமையில் வியாழக்கிழமை பூமி பூஜை போட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதில் திமக மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளா் சாமுடி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் தேவராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் ரமேஷ், உறுப்பினா் சிவராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.