செய்திகள் :

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

post image

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்த இந்த புயல் சின்னம், தற்போது மீண்டும் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதையும் படிக்க: தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு(பகல் 1 மணி வரை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு! 3 பேர் பலி!

கரீபியன் கடல்பகுதியிலுள்ள ஹெயிட்டி நாட்டின் மருத்துவமனையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர்.தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் நேற்று (டிச.24) புதுப்பிக்கப்பட்ட பொதுமருத்துவமனையை திறக்க வருகை... மேலும் பார்க்க

1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகும் கயல் தொடர்!

கயல் தொடர் 1000 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி புதிய சாதனையைப் படைத்துள்ளது.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கயல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இத்தொடர் எப்போதும் டிஆர்பியில் முதல் மூன்று... மேலும் பார்க்க

எம்எல்ஏ ,எம்பி, உள்ளாட்சித் தேர்தல்களை விஞ்சிய மன்னார்குடி வர்த்தக சங்க தேர்தல்!

மன்னாா்குடி: திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி வா்த்தக சங்க தோ்தல், 1 மாவட்ட காவல் கண்காணிப்பாளர், 5 மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், 6 காவல் ஆய்வாளா்கள், தஞ்சாவூர், திருவாரூா் மாவட்டங்களை சோ்ந்த 300... மேலும் பார்க்க

கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு! 5 மருத்துவர்கள் சஸ்பெண்டு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 5 மருத்துவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2 தலைமை மருத்துவர்கள் நேரில் வந்த... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை நீடிக்கும்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வுப் பகு... மேலும் பார்க்க

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை! 3வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளைக் கிண்ற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி இன்று (டிச.25) மூன்றாவது நாளாக தொடர்கிறது. கோட்புட்லி- பெஹ்ரோர் மாவட்டத்தைச் சேர்ந்த சேத்துனா (வயது 3) என்ற பெண் குழந்தை, ... மேலும் பார்க்க