அழகுப்படுத்த பல கோடி செலவு: வரலாற்றுச் சிறப்புமிக்க கான்பூர் பாலம் இடிந்து விழுந...
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, நாகைக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இதையும் படிக்க: சென்னை, புறநகரில் 5 நாள்களுக்கு பலத்த மழை!
இதன் காரணமாக, டெல்டா மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (பிற்பகல் 1 மணி வரை) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.