செய்திகள் :

அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை!

post image

அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று(நவ. 15) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க: கோவையில் துக்க வீட்டில் தீவிபத்து.. ஒருவர் பலி; மூவர் படுகாயம்!

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், கிருஷ்ணகிரி, கரூர், நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்குவா படத்தின் முதல் நாள் வசூல்!

கங்குவா படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் சூர்யாவுடன் பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித... மேலும் பார்க்க

சென்னை மேம்பாலத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு

சிவகாத்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், பெருங்களத்தூர், வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில... மேலும் பார்க்க

சென்னையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்!

சென்னை பட்டினப்பாக்கம் நொச்சிக்குப்பம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை வனத்துறையினர் இன்று மீட்டனர்.சென்னை பட்டினப்பாக்கம் நொச்சிக்குப்பம் கடற்கரையில் மீனவர்கள் வழக்கம்போல் காலையில் ப... மேலும் பார்க்க

அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்துக்கு புதிய திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு!

அரியலூர் மற்றும் மாவட்டத்துக்கான புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 15) அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்க... மேலும் பார்க்க

சைபர் மோசடியில் ரூ. 10 கோடியை இழந்த முதியவர்!

தில்லி ரோஹினி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற 70 வயது பொறியாளர் சைபர் கிரைம் மோசடி மூலம் ரூ. 10 கோடியே 30 லட்சம் ஏமாற்றப்பட்டுள்ளார்.காவல் துறை அதிகாரிகளின் தகவலின்படி, பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பொறியாளர்... மேலும் பார்க்க

எங்கெல்லாம் இன்று கனமழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று(நவ. 15) 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:மன்னார் வளைகுடா மற்று... மேலும் பார்க்க