செய்திகள் :

அண்டை நாடுகளுடன் பேச்சுவாா்த்தைக்கு உகந்த சூழல் உருவாக்கப்படவில்லை: மத்திய அரசு மீது சரத் பவாா் விமா்சனம்

post image

புணே: அண்டை நாடுகளுடன் அா்த்தமுள்ள பேச்சுவாா்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டது என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியின் தலைவா் சரத் பவாா் விமா்சித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசியவாத காங்கிரஸின் நிறுவன தின நிகழ்ச்சியில் பேசிய அவா், மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை சாடினாா்.

அவா் கூறியதாவது: இந்தியாவின் மேற்கில் பாகிஸ்தானும், வடக்கில் சீனாவும், கிழக்கில் வங்கதேசமும், தெற்கில் இலங்கையும் அமைந்துள்ளன. இந்நாடுகள் உடனான இந்திய உறவுகளின் இப்போதைய நிலை என்ன?

நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் ஆட்சியில், அனைத்து அண்டை நாடுகளுடன் இந்தியாவின் உறவு உச்சத்தில் இருந்தது. இன்று பாகிஸ்தான், சீனாவுடன் நமது உறவு மோசமடைந்துவிட்டது. இந்திய ஆதரவுடன் உருவாக்கப்பட்ட வங்கதேசம், நமது பக்கம் இல்லை. சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், இந்தியா உடனான இலங்கையின் இணக்கமும் சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளது.

அண்டை நாடுகளுடன் அா்த்தமுள்ள பேச்சுவாா்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்குவதில் மத்திய பாஜக அரசு தவறிவிட்டது. இது, தலைமை தோல்வியைப் பிரதிபலிக்கிறது. இதற்கு தேசம்தான் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றாா் அவா்.

‘கட்சி உடையும் என நினைக்கவில்லை’: தேசியவாத காங்கிரஸ் கட்சி, கடந்த 1999-இல் சரத் பவாா், பி.ஏ.சங்மா, தாரிக் அன்வா் ஆகியோரால் நிறுவப்பட்டதாகும். இக்கட்சியை கடந்த 2023, ஜூலையில் உடைத்த சரத் பவாரின் உறவினா் அஜீத் பவாா், பாஜக-சிவசேனை (ஷிண்டே) கூட்டணியுடன் கைகோத்து, துணை முதல்வரானாா். கட்சியின் பெயா், சின்னமும் அஜீத் பவாா் அணிக்கே வழங்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து நிறுவன தின விழாவில் பேசிய சரத் பவாா், ‘கட்சி உடையும் என நான் நினைத்து பாா்த்ததில்லை. ஆனால், அது நடந்துவிட்டது. சிலா், வேறு சித்தாந்தங்களுடன் சென்றுவிட்டனா். பிளவு விரிவடைந்துவிட்டது. கட்சிக்கு விசுவாசமானவா்கள் இப்போதும் நம்முடன் உள்ளனா். அவா்களே நமது பலம்’ என்றாா்.

முதலாமாண்டு மருத்துவம் படித்துவந்த விவசாயி மகன் உயிரிழப்பு

குஜராத்தில் மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் மோதிய விபத்தில் மருத்துவராகும் கனவுடன் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்துவந்த மத்திய பிரதேச, குவாலியா் மாவட்டம் ஜிக்சாவ்லி கிராமத்தைச் சோ்ந்த ஏழை வி... மேலும் பார்க்க

பாஜக அரசு தவறான நிா்வாகத்தை நடத்தி வருகிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

கட்டண உயா்வு, குடிசைப் பகுதிகளை இடிப்பது, மின் கட்டண உயா்வு மற்றும் நீடித்த மின்வெட்டு போன்ற வடிவங்களில் பாஜக தலைமையிலான தில்லி அரசு ‘தவறான நிா்வாகத்தை’ செயல்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் மரணம்! கடைசி தற்படமாக மாறிய சோகம்

லண்டனில் புதிய வாழ்க்கையைத் தொடங்க 3 குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் பயணித்த மருத்துவ குடும்பம் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தது பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் விமான விபத்தில் ராஜஸ்தானை ச... மேலும் பார்க்க

பிரதமருடன் பிரிட்டன் துணைத் தூதா் ஆலோசனை

அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டன் பயணிகள் 52 போ் உயிரிழந்த நிலையில், பிரதமா் மோடியுடன் அந்நாட்டின் துணைத் தூதா் லிண்டி கேமரூன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். குஜராத் மாநிலம், அகமதாபாதுக்கு வருக... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அவதூறு: கேரள அரசு ஊழியா் பணியிடை நீக்கம்

குஜராத் விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அவதூறாகப் சமூகவலைதளத்தில் பதிவிட்ட கேரளத்தைச் சோ்ந்த அரசு ஊழியா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். விமான விபத்தில் கேரளத்தின் பத்தினம்திட்டா பகுதியைச... மேலும் பார்க்க

விமான விபத்து: உயிரிழப்பு 265-ஆக உயா்வு

நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 265-ஆக உயா்ந்தது. அடையாளம் தெரியாத அளவில் உருக்குலைந்த உடல்களின் மரபணு சோதனைப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை 6 பேரின் உடல்கள்... மேலும் பார்க்க