செய்திகள் :

அதானி விவகாரம்: முதல் நாளே ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்த காங்கிரஸ் எம்பிக்கள்!

post image

நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்தை விசாரிக்கக் கோரி அவைத் தலைவருக்கு காங்கிரஸ் எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், அதானி விவகாரத்தை மத்திய அரசுக்கு எதிராக கையில் எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர்.

நாட்டில் 2020 - 2024 காலகட்டத்தில் சூரிய மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள சில மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபா் கெளதம் அதானி உள்ளிட்டோா் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் சில தினங்களுக்கு முன்னா் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்தக் கோரி மக்களவை உறுப்பினர்கள் கே.சி.வேணுகோபால், மணீஷ் திவாரி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர்.

இதையும் படிக்க : பேச்சுக்கு நேரமில்லை.. மகாராஷ்டிர புதிய முதல்வர் நாளை பதவியேற்பது கட்டாயம்!! ஏன்?

மேலும், தில்லி காற்று மாசுபாடு குறித்து குறுகிய கால விவாதத்தை நடத்தக் கோரி காங்கிரஸ் எம்பி ரஞ்சித் ரஞ்சன், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு சிறப்பு நிதி உதவி வழங்குவது குறித்து விவாதிக்கக் கோரி மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸும் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர்.

5 டன் போதைப்பொருள்கள் பறிமுதல்: 6 நபர்கள் கைது!

அந்தமானில் 5 டன் அளவிலான போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்த இந்தியக் கடலோரக் காவல்படையினர் 6 நபர்களைக் கைது செய்துள்ளனர். அந்தமான் கடல் பகுதியில் கடலோர காவல்படை டோர்னியர் விமானத்தின் விமானி நவம்பர் 23 அ... மேலும் பார்க்க

மணிப்பூரில் கொல்லப்பட்ட 3 வயது சிறுவனின் தலையில் குண்டு காயம்!! உடல் கூறாய்வில் அதிர்ச்சி

மணிப்பூரில் தீவிரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட சிறுவனின் உடல் கூறாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது.மணிப்பூரில் மலைப் பகுதி மாவட்டமான ஜிரிபாமில், குகி தீவிரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட ஒரு குழந்தை மற்று... மேலும் பார்க்க

நாட்டின் நலனுக்காக அல்ல, ஹிந்து-முஸ்லிம் பிளவுக்காகவே அதிகாரம்: சம்பல் குறித்து ராகுல்

புது தில்லி: மத்திய மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில், அரசு அதிகாரத்தை மாநிலங்களில் ஹிந்து-முஸ்லிம் பிளவுக்காகவே பயன்படுத்தப்படுகிறது, மாநில அல்லது நாட்டின் நலனுக்காக அல்ல என்று சம்பல் மோதல் குறித்து ரா... மேலும் பார்க்க

ஆட்சி அமைப்பது குறித்து மகாயுதி கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை: அஜித் பவார்!

மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய அரசு அமைப்பதற்கான சூத்திரத்தை இறுதிசெய்வது குறித்து மகாயுதி கூட்டணி கட்சிகளிடையே விவாதங்கள் நடைபெற்று வருவதாக மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித்... மேலும் பார்க்க

அதானி விவகாரத்தால் அமளி: முடங்கியது நாடாளுமன்றம்!

அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் புதன்கிழமை காலை வரை அவைகள் ஒத்திவைக்கப்பட்டது.நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய ... மேலும் பார்க்க

திருமண நிகழ்வுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது நிகழ்ந்த சோகம்: 5 பேர் பலி!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் இன்று அதிகாலை நடந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.இந்த விபத்து மல்லவான் காவல்நிலையத்திற்குள்பட்ட பகுதியில் அதிகாலை 3 மணியளவ... மேலும் பார்க்க