செய்திகள் :

America: ``தகுதியற்றவர்கள்" - ராணுவத்திலிருந்து நீக்கப்படும் திருநங்கைகள்; டொனால்ட் ட்ரம்ப் முடிவு!?

post image

தீவிர வலதுசாரி சிந்தனையாளரான முன்னாள் அமெரிக்க அதிபரும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான டொனால்ட் ட்ரம்ப் , இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றிருக்கிறார். அதன்மூலம் அமெரிக்காவின் 47-வது அதிபராக வலுவாக பதவியை கைப்பற்றியிருக்கிறார். பிரசாரத்தின் போதே தனிமனித தாக்குதல்கள், பெண் வெறுப்புப் பேச்சுகள், இனவெறிக் கருத்துகள் என அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டார். இந்த நிலையில், The Sunday Times எனும் வார இதழில் ஒரு கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது.

டொனால்டு ட்ரம்ப்

அதில், ``திருநங்கைகள் மருத்துவ ரீதியாக ராணுவத்தில் சேவையாற்ற தகுதியற்றவர்கள் எனக் குறிப்பிட்டு, அதனால் அமெரிக்க இராணுவத்திலிருந்து அனைத்து திருநங்கை ராணுவ வீரர்களையும் நீக்குவதற்காக டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டிருக்கிறார்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவரின் முந்தைய அதிபர் பதவிகாலத்தில், ராணுவத்தில் திருநங்கைகளை இணைப்பதற்கு தடை விதித்திருந்தார். ஆனால், ஏற்கெனவே ராணுவத்தில் பணியாற்றி வந்தவர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதித்தார். டொனால்ட் ட்ரம்புக்குப் பிறகு அதிபராகப் பதவியேற்ற ஜோ பைடன், அந்தத் தடையை நீக்கினார்.

இந்த நிலையில், தற்போது அமெரிக்க ராணுவத்தில் சுமார் 1500 திருநங்கைகள் பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்னர் அமெரிக்க இராணுவத்தின் பொறுப்பாளரும், டொலான்ட் ட்ரம்பின் பாதுகாப்புத் தேர்வாளருமான பீட் ஹெக்செத், The Washington Post நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், `` ராணுவம் முழுவதும் பெண்கள் மற்றும் திருநங்கைகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் அமெரிக்க பாதுகாப்பை சீர்குலைக்கும்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/JailMathilThigil

Kangana Ranaut: ``பெண்களை அவமரியாதை செய்பவர்கள்..." - உத்தவ் தாக்ரே தோல்வி குறித்து கங்கனா ரனாவத்!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க, ஏக்நா... மேலும் பார்க்க

Udhaynithi Stalin: ``இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்!" - தொண்டர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும், விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறையின் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் 27-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அந்தக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தமிழ்நா... மேலும் பார்க்க

``கரூர் விஷன் - 2030; ரூ.50,000 கோடி இலக்கு!'' -அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதென்ன?

மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்கரூர் மாவட்டம் ஜவுளி ஏற்றுமதி, பேருந்து கட்டுமானம், கொசுவலை உற்பத்தி உள்ளிட்ட முக்கிய தொழில்கள் நிறைந்த மாவட்டமாகும். இந்நிலையில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் க... மேலும் பார்க்க

Vijay: ``பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க வேண்டும்'' - தவெக விஜய்

"பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்று தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், " சர்வதேச அளவில் பெண்களின் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: தேவேந்திர பட்னாவிஸ் - ஏக்நாத் ஷிண்டே.. முதல்வர் பதவி யாருக்கு? முடிவெடுப்பதில் சிக்கல்!

பா.ஜ.க தனித்து 130-க்கும் மேல் வெற்றி..மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: முருங்கைக்கீரை கிடைக்காதபோது, அதை கேப்ஸ்யூல் வடிவில் எடுத்துக்கொள்ளலாமா?

Doctor Vikatan: அடிக்கடி முருங்கைக்கீரையை எடுத்துக்கொள்ள முடியாதவர்கள், முருங்கைக்கீரை பொடியை வைத்துச்செய்யப்படுகிற மாத்திரைகளை, கேப்ஸ்யூலை எடுத்துக்கொள்ளலாம் என விளம்பரப்படுத்தப்படுகிறதே... அது எந்த ... மேலும் பார்க்க