உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும்: ரஷிய அதிபர்
அதானி வெளிநாட்டில் குடியேற ஆயத்தம்? சுப்பிரமணியன் சுவாமி சொன்ன விஷயம்
சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ. 2,100 கோடி லஞ்சமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாகவும் நியூ யார்க் நீதிமன்றத்தில் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல அதானி ஆயத்தமாகி வருவதாக சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பான பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விவரமறிந்த வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவரிடமிருந்து ஒரு தகவல் கிடைத்துள்ளது: அதானி ஸ்விட்சர்லாந்தில் வீடு கட்டி வருகிறார். ஆனால், இந்தியாவில் கட்டவில்லை. ஏன்?
துபையில் சகோதரர் ஒருவரை நிறுத்தியுள்ளார் அவர். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாசர் ஷேயுப் என்ற நபருடன் இணைந்தும் செயல்படுகிறார் அவர். அத்துடன் பணத்தை வெளிநாடுகளில் மெல்ல பதுக்கியும் வருகிறார்” என்று பதிவிட்டுள்ளார்.
அதானி மீதான குற்றச்சாட்டுகளில் விசாரணை தொடங்கியவுடன், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் அதில் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.