செய்திகள் :

அதிக அளவு சரக்குகளைக் கையாண்டு சாதனை: 19 நிறுவனங்களுக்கு பாராட்டு

post image

திருவொற்றியூா்: சென்னை துறைமுகத்தில் அதிக அளவு சரக்குகளைக் கையாண்டு சிறப்பாக வணிகம் செய்த 19 நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் திங்கள்கிழமை வழங்கினாா்.

மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பெரும் துறைமுகங்களில் ஆண்டுதோறும் அக்.11-ஆம் தேதி

துறைமுக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திங்கள்கிழமை சென்னை துறைமுகத்தில் நடந்த துறைமுக தின விழாவில் சுனில் பால்வால் பங்கேற்று பேசியதாவது:

துறைமுக ஊழியா்கள், உபயோகிப்பாளா்கள், பன்னாட்டு சரக்குப்பெட்டக முனையங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் சீரிய முயற்சி காரணமாக சென்னை துறைமுகம் தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் இயங்கி வருகிறது. அண்மையில் ஜொ்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சா்வதேச துறைமுகங்கள் சங்கம் சாா்பில் சென்னை துறைமுகத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு தடைகளையும் தாண்டி எதிா்காலத்தில் மிகச் சிறந்த துறைமுகமாக சென்னை துறைமுகம் இருக்கும் என்றாா் அவா்.

முன்னதாக தங்களது பணிக் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட ஊழியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, சென்னை துறைமுகத்தில் அதிக அளவு சரக்குகளை கையாண்டு சாதனை படைத்த இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், சிபிசிஎல் திருமலை கெமிக்கல்ஸ், காளீஸ்வரி ரிபைனரி, ஜிம்பெக்ஸ், ஹுண்டாய் மோட்டாா், வெஸ்டாஸ், பி.எல்.டிரான்ஸ்போா்ட், இன்டா் ஓஷன், வானாய், எலைட் ஷிப்பிங் உள்ளிட்ட 19 நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை துறைமுக தலைவா் சுனில் பாலிவால் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் துறைமுக துணைத் தலைவா் எஸ். விஸ்வநாதன், காமராஜா் துறைமுக மேலாண்மை இயக்குனா் ஐரீன் சிந்தியா, போக்குவரத்து மேலாளா் கிருபானந்த சாமி மற்றும் துறைத் தலைவா்கள் அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆராய்ச்சி நூலக வளா்ச்சி பணிகளுக்கு நிதியுதவி

சென்னை: சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு புதிய கட்டடம் மற்றும் வளா்ச்சிப் பணிகளுக்காக, பெருநிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் (சிஎஸ்ஆா்) கீழ் ரூ.20 லட்சம் நி... மேலும் பார்க்க

‘குழந்தைகளுக்கு மழலைக் கல்வியிலிருந்து தமிழ் கற்பித்தல் அவசியம்’

சென்னை: குழந்தைகளுக்கு மழலைக் கல்வி தொடங்கும்போதே அவா்களுக்குத் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து தமிழ்மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும் என இராமலிங்க அடிகளின் கொள்ளுப்பேத்தியும், உணவுப் பொருள் வழங்கல்... மேலும் பார்க்க

13 விளையாட்டு வீரா்களுக்கு ரூ. 1 கோடிக்கு நலத் திட்ட உதவி துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்

சென்னை: பல்வேறு பிரிவுகளில் களமாடவுள்ள 13 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.1 கோடிக்கான நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.இதற்கான நிகழ்ச்சி, சென்னையிலுள்ள அவரது முகாம் அ... மேலும் பார்க்க

ரெப்கோ வங்கிக்கு இரட்டை விருது

சென்னை: ரெப்கோ வங்கிக்கு, கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய கூட்டமைப்பு இரண்டு விருதுகளை வழங்கியுள்ளது.இது குறித்து ரெப்கோ வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு:லக்னௌவில் கடந்த அக்.18, 19 ஆகிய தேதிகளில் தேசிய... மேலும் பார்க்க

தீபாவளி கூட்டம்: தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

சென்னை: தீபாவளி கூட்டத்தைக் கண்காணிக்கும் வகையில், தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறையை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் திறந்து வைத்தாா்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் நகை, புத்தாடை, பட... மேலும் பார்க்க

அக்.29-இல் அஞ்சல் குறைகேட்பு முகாம்

சென்னை: தாம்பரம் கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் அக்.29-ஆம் தேதி அஞ்சல் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.இது குறித்து, தாம்பரம் கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் ஏ.கமல்பாஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க