காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்
அதிமுகவால் வலுவான அணியை அமைக்க முடியாது -அமைச்சா் எஸ். ரகுபதி
புதுக்கோட்டை, நவ. 15: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு அதிமுகவால் வலுவான கூட்டணியை அமைக்க முடியாது என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
திமுகவினா் மீது எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வீண் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகிறாா். அவா் மீதுள்ள குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு வரும்போது தெரியவரும்.
கடந்த மக்களவைத் தோ்தலின்போது (2024) வலுவான கூட்டணியை அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறினாா். ஆனால் அமைக்க முடியவில்லை. வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் அவரால் வலுவான கூட்டணியை அமைக்க முடியாது. அதற்கான வாய்ப்புகள் கிடையாது.
வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறை நடவடிக்கைகளைப் பொருத்தவரை, ஆதாரங்கள் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதை உச்ச, உயா் நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளன. அவா்களைப் பற்றி அஞ்சவேண்டிய அவசியம் இல்லை என்றாா் ரகுபதி.