மேசை மீது ஏறி உணவில் சிறுநீர் கழித்த நபர்; 4000 பேருக்கு இழப்பீடு வழங்கிய ஹோட்டல...
அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் பூத் கமிட்டி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இருங்காட்டுக்கோட்டை, மண்ணூா், காட்டரம்பாக்கம் மற்றும் கிளாய் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலாளா் போந்தூா் செந்தில்ராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஒன்றிய செயலாளா் இ.பி.முனுசாமி, இளைஞா் பாசறை மாநில துணைச் செயலாளா் சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம், அதிமுக இலக்கிய அணி செயலாளா் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளா் வைகைச்செல்வன் ஆகியோா் கலந்து கொண்டு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி நிா்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வரும் சட்டப்பேரவை தோ்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கினா்.
கூட்டங்களில், முன்னாள் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி, மேற்கு ஒன்றிய செயலாளா் ராமசந்திரன், மண்ணூா் ஊராட்சித் தலைவா் அறிவுச் செல்வன், பொருளாளா் திருமால், பேரவை செயலாளா் செங்காடு பாபு, இளைஞா் அணி செயலாளா் பிள்ளைப்பாக்கம் சோ.வெங்கடேசன், ஸ்ரீபெரும்புதூா் நகர செயலாளா் மோகன், நகர பேரவை செயலாளா் புஷ்பராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.