செய்திகள் :

`அதிமுக-வை அழிவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்‌ எடப்பாடி பழனிசாமி!' - ஆ.ராசா சொல்வதென்ன?

post image

தி.மு.க மாணவர் அணியின் மாநில அளவிலான மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் இன்று நடைபெற்றது. மாணவர் அணியின் மாநிலச் செயலாளர்

திமுக மாணவர் அணி கூட்டம்

ராஜீவ் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தி.மு.க மாணவர் அணி பொறுப்பாளரும் துணை செயலாளருமான எம்.பி ஆ.ராசா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தியுள்ளனர்.

கூட்டத்தில் பேசிய எம்.பி ஆ.ராசா, "நவீன தொழில்நுட்பங்கள் வளராத காலகட்டத்தில் உலகில் உள்ள வரலாறுகளை எல்லாம் கொண்டு வந்து தம்பிகளுக்கு கடிதங்களாக தந்தவர் பேரறிஞர் அண்ணா. மனித சமுதாயம் பகுத்தறிவை நோக்கித்தான் நகர வேண்டும் என போராடியவர் பொியார். சாதி ஒழிய வேண்டும், பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும், சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும் என்ற பெரியாரின் கொள்கைகள் வெற்றி பெற வேண்டும் என்றால், அரசியல் அதிகாரம் தேவை என அண்ணா உணர்ந்தார். அதற்காகத்தான் தி.மு.க - வை தொடங்கினார். ஓர் அரசியல் கட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். அதிகாரத்திற்கு வரவில்லை என்றால், அதன் கொள்கைகளை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அடிக்கடி கூறுவார்.

திமுக மாணவர் அணி கூட்டம்

கொள்கை இல்லாத அரசியல் கட்சி அழிந்து விடும். அ.தி.மு.க தலைமை என்கிற பெயரில் கொள்கையற்ற செயல்பாடுகளால் அந்தக் கட்சியை அழிவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்‌ எடப்பாடி பழனிசாமி. கொள்கைதான் ஒரு கட்சிக்கான அடிப்படை. நாட்டில் பலரும் மோடியை அரசியல் ரீதியாக எதிர்கிறார்கள். ஆனால் சித்தாந்த ரீதியில் பா.ஜ.க - வையும், பிரதமர் மோடியையும் எதிர்ப்பதற்கு வேறு எந்த கட்சிக்கும் கொள்கை கிடையாது. இந்துத்துவா, மோடி, அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்க்கு எதிரான தத்துவத்தை கொண்டிருக்கிற ஒரே இயக்கம் திராவிடர் கழகமும், தி.மு.க -வும் தான்" என்றார்.

கச்சத்தீவு : `திமுக செய்த தவறால்... தீர்மானம் வெறும் கண்துடைப்பு” - டிடிவி தினகரன் காட்டம்

தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அமமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ``வாக்குறுதி... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா : 'பாஜக-வுக்கு தேவை கடந்த காலத்தின் துர்நாற்றம்' - எம்.பி சு.வெங்கடேசன் காட்டம்

வக்ஃப் திருத்த மசோதா தாக்கல் என்ற பேச்சு எழுந்ததுமே எதிர்க்கட்சிகள் தொடங்கி பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நேற்று(ஏப்ரல்-2) கடுமையான விவாதத்திற்கு பிறகு, மக்களவையில் வக்... மேலும் பார்க்க

கழுகார் அப்டேட்ஸ் : `பெண்புள்ளி... நாகப்புள்ளி’ - மலர்க் கட்சியின் தமிழக நாற்காலி யாருக்கு?

மோதிக்கொள்ளும் கோஷ்டிகள்!பல்கலைக்கழக `பதவி’ பாலிட்டிக்ஸ்...மான்செஸ்டர் மாவட்டத்திலுள்ள ‘பசுமையான’ பல்கலைக்கழகத்தில், உச்சப் பொறுப்பில் இருந்தவரின் பதவிக்காலம் சமீபத்தில் நிறைவுபெற்றது. அவர், மீண்டும் ... மேலும் பார்க்க

TVK : ஆர்வத்தோடு விஜய்; முட்டுக்கட்டையாக நிற்கும் `பவர்புல்' அணி? - தவெகவில் என்ன நடக்கிறது?

'பனையூர் அப்டேட்!'மாதத்திற்கு ஒரு நிகழ்ச்சி என நடத்தி திடீர் பேசுபொருளாகி மறைந்து விடுகிறது தவெக. பிப்ரவரியில் ஆண்டு விழா, மார்ச்சில் பொதுக்குழுக் கூட்டம் என நடத்தி முடித்தவர்கள், இந்த மாத இறுதியில் ப... மேலும் பார்க்க