"எளியவர்களுக்கு உணவு எட்டாக்கனியாகக் கூடாது" - தாயின் பெயரில் அன்னதான விருந்து த...
அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அதிவேகமாக 880 கோல்களை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.
இன்டர் மியாமி அணிக்காக இன்று அதிகாலை நடந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
மெஸ்ஸி புதிய சாதனை
இன்டர் மியாமி அணி சியாட்டல் சௌண்டர்ஸ் அணியை 3-1 என வீழ்த்தியது. இந்தப் போட்டியில் 41-ஆவது நிமிஷத்தில் ஜோர்டி ஆல்பா உதவியால் மெஸ்ஸி கோல் அடித்தார்.
இதுவரை மெஸ்ஸி 1,122 முறை விளையாடி 880 கோல்கள், 390 அசிஸ்ட்டுகளைச் செய்து அசத்தியுள்ளார்.
மிகக் குறைந்த வயதிலும், அதிவேகமாகவும் 880 கோல்களை மெஸ்ஸி நிறைவு செய்துள்ளார்.
போர்ச்சுகலைச் சேர்ந்த 40 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் (943) அடித்தவராக இருக்கிறார்.
ஓய்வு பெறகிறாரா மெஸ்ஸி?
இதற்கு முன்பாக ரொனால்டோ 880 கோல்களை தனது 39-ஆவது வயதில் 1,214போட்டியின் போது அடித்திருந்தார். இவரை விட 92 போட்டிகள் குறைவாக மெஸ்ஸி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
மெஸ்ஸி தனது கடைசி உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியை தனது சொந்த மண்ணில் விளையாடினார்.
அடுத்தாண்டு தொடங்கும் 2026 உலகக் கோப்பையில் மெஸ்ஸி விளையாடுவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சந்தேகம் எனக் கூறியது ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.