செய்திகள் :

அதிவேக 6000* ரன்கள்..! ஆம்லா சாதனையை சமன் செய்தார் பாபர் அசாம்!

post image

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக பாகிஸ்தான் - நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. நியூசிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றிபெற்றும், பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில், இந்த முத்தரப்பு தொடரில் சாம்பியன்ஸ் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி கராச்சியில் இன்று(பிப்ரவரி 14) நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் 29 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையும் படிக்க... காயத்தில் இருந்து மீண்ட ரச்சின்! தொடக்க ஆட்டத்தில் விளையாடுவாரா?

மேலும், இந்தப் போட்டியில் அசாம் 10 ரன்கள் எடுத்தபோது ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்களைக் கடந்தவர் என்ற தென்னாப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லாவின் சாதனையையும் சமன் செய்தார்.

ஒருநாள் போட்டிகளில் வேகமாக 6000 ரன்கள் எடுத்த வீரர்கள்

  • பாபர் அசாம்* - 123 இன்னிங்ஸ்

  • ஹஷிம் ஆம்லா-123 இன்னிங்ஸ்

  • விராட் கோலி-136 இன்னிங்ஸ்

  • கேன் வில்லியம்சன் -139 இன்னிங்ஸ்

  • டேவிட் வார்னர் -139 இன்னிங்ஸ்

  • ஷிகர் தவான் -140 இன்னிங்ஸ்

  • விவ் ரிச்சர்ட்ஸ் -141 இன்னிங்ஸ்

  • ஜோ ரூட் -141 இன்னிங்ஸ்

இதையும் படிக்க... சாம்பியன்ஸ் டிராபி: பரிசுத் தொகை விவரம்..!

சாம்பியன்ஸ் டிராபி: 2ஆவது பந்திலேயே காயத்தால் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஸமான் முதல் ஓவரிலேயே காயம் காரணமாக வெளியேறினார்.சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற முக... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசை: பந்து வீச்சாளர்களில் முதலிடம் பிடித்த மகீஷ் தீக்சனா!

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கை வீரர் மகீஷ் தீக்சனா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் இன... மேலும் பார்க்க

1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்த வில்லியம்சன்!

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். சாம்பியன்ச் டிராபியின் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற முகமது... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த ஷுப்மன் கில்..! டாப் 10இல் 4 இந்தியர்கள்!

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவைச் சேர்ந்த ஷுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார். 25 வயதாகும் ஷுப்மன் கில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளா... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு!

சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.கராச்சியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. பாது... மேலும் பார்க்க

கவுன்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடும் ஷர்துல்!

இங்கிலாந்து கவுன்டி சாம்பியன்ஷிப்பில் எசெக்ஸ் அணிக்காக விளையாட இந்திய ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.ஐபிஎல் தொடரில் 95 போட்டிகளில் விளையாடியுள்ள ஷர்துல் தாகூரை, இந்தாண்டு தொட... மேலும் பார்க்க