தோ்தல் ஆணையா்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
புது தில்லி : தோ்தல் ஆணையா்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று(பிப். 19) விசாரணைக்கு வந்தன.
இந்த நிலையில், இந்த விவகாரம், பின்னர் ஒரு தேதியில் பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த வழக்கு விசாரணை மார்ச் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.