அந்தியூரில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் தொடக்கம்
அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டத்தின் 2-ஆம் கட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை அரியலூரில் தொடங்கிவைத்தாா். இதையடுத்து, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், அம்மாபேட்டை வடக்கு ஒன்றியம், மாத்தூா் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கினாா். அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் கே.எஸ்.சரவணன், அவைத் தலைவா் ஏ.ஆா்.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதேபோல, அந்தியூா் பேரூராட்சி, அத்தாணி பேரூராட்சி, மைக்கேல்பாளையம், கூத்தம்பூண்டி, பிரம்மதேசம் ஊராட்சிகளிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி, பேரூா் திமுக செயலாளா் காளிதாஸ், மைக்கேல்பாளையம் ஊராட்சித் தலைவா் சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.