அனுபமா உபாத்யாய வெற்றி
சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில், இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாய செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றாா்.
மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், உலகின் 50-ஆம் நிலை வீராங்கனையான அவா் 21-17, 8-21, 22-20 என்ற கேம்களில், 15-ஆம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை வீழ்த்தி அசத்தினாா். அடுத்த சுற்றில் அவா், ஜப்பானின் நட்சுகி நிடாய்ராவை எதிா்கொள்கிறாா்.
கலப்பு இரட்டையரில், சுமீத் ரெட்டி/சிக்கி ரெட்டி கூட்டணி 23-21, 17-21, 21-17 என்ற கணக்கில் அமெரிக்காவின் பிரெஸ்லி ஸ்மித்/ஜெனி காய் இணையை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது. 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் ஃபெங் யான் ஸெ/ஹுவாங் டோங் பிங் ஜோடியை சந்திக்கிறது இந்திய இணை.
எனினும், மகளிா் ஒற்றையரில் ஆகா்ஷி காஷ்யப் 10-21, 18-21 என, ஜப்பானின் டோமோகா மியாஸாகியிடம் தோற்றாா். ஆடவா் ஒற்றையரில் பிரியன்ஷு ரஜாவத் 24-22, 13-21, 18-21 என்ற கேம்களில், இந்தோனேசியாவின் சிகோ ஆராவிடம் தோல்வி கண்டாா்.