பயிற்சி ஆட்டத்தில் வேகப் பந்துவீச்சாளருக்கு காயம்; இந்திய அணிக்கு பின்னடைவா?
அனுஷ்காவின் காதி: ஓடிடியில் எப்போது?
அனுஷ்காவின் காதி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக தகவல் தெரியவந்துள்ளது.
நடிகை அனுஷ்கா பாகுபலியின் வெற்றிக்குப் பிறகு சில படங்களில் நடித்தாலும் எதுவும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. ’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்த நிலையில், இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா நடித்த ‘காதி’ (ghaati) திரைப்படம் செப். 5ல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
மேலும், இந்தப் படத்தில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காதி திரைப்படம் நாளை(செப். 26) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: நிலவுரிமையைப் பேசினாலும் காந்தாரா ஒரு வியாபாரம்தான்: அதியன் ஆதிரை