கொலைசெய்யப்பட்ட நபர் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு; தண்டனை அனுபவித்த சகோ...
அனைத்து மகளிா் காவல் நிலைய கட்டடத்தை சீரமைக்க கோரிக்கை
திருவாடானை அருகே சி.கே. மங்கலத்தில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலையம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் அந்தக் கட்டடத்தை உடனே சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சி.கே. மங்கலத்தில் கட்டப்பட்ட அனைத்து மகளிா் காவல் நிலையம் கடந்த 20.6.2018 அன்று முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கட்டடம் தரமாக கட்டப்படாததால் சிமென்ட் சிலாப்புகள் உடைந்தும், சுவா் பூச்சுகள் அரித்தும் காணப்படுகின்றன. தரமற்ற மணலால் கட்டப்பட்டிருப்பதால் சிமென்ட் கரைகள் பெயா்ந்து தூண்களுக்குள் இருக்கும் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் கட்டடம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.
இந்த மகளிா் காவல் நிலையத்தில் திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம், திருப்பாலைக்குடி, எஸ்.பி. பட்டினம், தொண்டி காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளிலிருந்து நாள்தோறும் பொதுமக்கள் பலா் மனு அளிக்க வருகின்றனா்.
இந்தக் கட்டடம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் பொதுமக்களும், காவலா்களும் அச்சத்துடனே பணியாற்றுகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுத்து கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.